How to Fix It Lost Your Windows Administrator Password without login pc?
தற்போது நாம் பார்க்கப்போவது உங்களுடைய கணினியின் கடவுச்சொல் அதாவது(Password) மறந்துவிட்டதா சரி பரவால்லை கவலைபடாதீர்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன். மேலும் இந்தப் பதிவில் உங்களுடைய விண்டோஸ் கணினிக்குள் கடவுச்சொல் (Password) இல்லாமல் எப்படி செல்வது என்பதை இப்போது பார்ப்போம்
எனவே நீங்கள் கடவுச்சொல் (Password) இல்லாமல் உங்கள் கணினிக்குள் செல்ல வேண்டுமென்றால்.
உங்களிடம் Bootable செய்யப்பட்டுள்ள Pen drive அல்லது CD வேண்டும்.
இதில் ஏதாவது ஒன்று அவசியம் வேண்டும்.
1) முதலில் உங்களுடைய கணினியை திறந்து உங்களுடைய கடவுச்சொல் (Password) கொடுத்து முயற்சி செய்து பாருங்கள் ஒரு வேலை கணினிக்குள் சென்றுவிடலாம்.செல்லவில்லை என்றால் உங்களுடைய கணினியை Restart செய்யுங்கள்.
2) கணினியை Restart செய்தவுடன் Boot Menu செல்லுங்கள்.
Boot Menu செல்வதற்கு Bootable செய்யப்பட்ட Pen drive அல்லது CD இணையுங்கள். நினைத்தவுடன் F12 அல்லது F10 அழுத்துங்கள்.
Boot Menu-க்குள் செல்லவில்லை என்றால் உங்கள் கணினியின் மாடல் நம்பரை கூகுள் செய்து பாருங்கள்.
Boot Menu-க்குள் வந்தவுடன் உங்களின் Pen drive அல்லது CD தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3) தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இந்த திரை வந்து இருக்கும். இங்கு SHIFT + F10 அழுத்துங்கள். அழுத்தியவுடன் Command Prompt வரும்.
4) Command Prompt வந்தவுடன் மேலே திரையில் தெரியும் கமெண்ட்களை டைப் செய்யுங்கள்.
நான் E டைப் செய்து வைத்து இருக்கிறேன்.
எதற்காக E டைப் செய்தேன் என்றால் என்னுடைய OS(Operating System) E என்ற Partition-இல் Install செய்யப்பட்டுள்ளது.
அதனால் நான் E டைப் செய்து வைத்திருக்கிறேன்.
உங்கள் கணினியில் எந்த இடத்தில் OS Install செய்யப்பட்டுள்ளதோ அந்த இடத்தை டைப் செய்யுங்கள்.செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
5) உங்கள் Partition டைப் செய்தவுடன் CD Windows என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
6) CD Windows டைப் செய்தவுடன், CD Windows32 என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
7) CD Windows32 டைப் செய்தவுடன், copy utilman.exe utilman1.exe என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
8) copy utilman.exe utilman1.exe டைப் செய்து Enter அழுத்தியவுடன் 1 file copied. என்று வந்திருக்கும், மீண்டும் ஒருமுறை copy cmd.exe cmd1.exe என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
9) copy cmd.exe cmd1.exe டைப் செய்து Enter அழுத்தியவுடன் மீண்டும் ஒருமுறை 1 file copied. என்று வந்திருக்கும், கீழே del utilman.exe என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
10) del utilman.exe டைப் செய்தவுடன், rename cmd.exe untilman.exe என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
11) rename cmd.exe untilman.exe டைப் செய்தவுடன், exit என்று டைப் செய்யுங்கள் செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
12) பின்பு அனைத்து திரைகளையும் close செய்துவிட்டு.Restart செய்யுங்கள்.
13) Restart செய்துவிட்டு.திரையில் தெரியும் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
14) மீண்டும் ஒரு முறை Command Prompt வந்து இருக்கும்.அதில் userpasswords2 என்று டைப் செய்யுங்கள்.செய்துவிட்டு Enter அழுத்துங்கள்.
15) புதிய திரை வந்திருக்கும் அதில் Reset Password என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.கிளிக் செய்து உங்களுடைய புதிய Password மாற்றி கொள்ளுங்கள்.பின்பு அனைத்து திரைகளுக்கும் OK என்று கொடுத்து விடுங்கள்.
எல்லாம் முடிந்தது இப்போது நீங்கள் மாற்றிய புதிய Passwordடை கொடுங்கள் மாயாஜாலத்தை பார்ப்பீர்கள் அதாவது உங்கள் கணினிக்குள் சென்றுவிடுவீர்கள்.
இதில் எதாவது Error வந்தால் கமெண்டில் சொல்லுங்கள். நன்றி....
படித்தமைக்கு நன்றி. மேலும் subscribe பண்ணுங்க. இந்த பதிவை பற்றிய கருத்தை Comment செய்யவும், இப்பதிவு பிடித்திருந்தால் Likeபண்ணுங்கள் மற்றும் நண்பர்களுடன் Share செய்வுங்கள்.

















1 Comments
hi
ReplyDelete