Ticker

6/recent/ticker-posts

How to reduce data usage when using WhatsApp Call, Video in Tamil..

 

கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது மக்கள் பெருமளவில் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் மாணவர்களின் online வகுப்பிற்கு இணைப்பில் இருக்க ஸ்மார்ட்போன்களை நாட வேண்டிய நிலை நிலவுகிறது.

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் அதிக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. இதை கொண்டு தரவுகளை பரிமாறி கொள்வது மட்டுமின்றி ஆடியோ, ஃபோட்டோ, லொகேஷன், வீடியோ, வாய்ஸ் ஒவர் இண்டர்நெட் ப்ரோடோகால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இயக்க முடியும். எனினும் இவற்றுக்கு சீரான இணைய வேகம் அவசியம் ஆகும்.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் ஒன்றுக்கு நிமிடத்திற்கு 740 கிலோபைட் இண்டர்நெட் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது இணைய பயன்பாடு மேலும் அதிகரிக்குமாம்.

அத்தியாவசிய சேவைகளுக்கு சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில், இண்டர்நெட் பேண்ட்வித் பயன்பாட்டை குறைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் போது டேட்டா பயன்பாட்டை எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது:

வாட்ஸ்அப் கால் டேட்டா பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளில் சில,

1 - வாட்ஸ்அப் செயலியினுள் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

2 - செட்டிங்ஸ் ஆப்ஷனில் டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

3 - இனி லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷனில் காணலாம்

புகைப்படம் மற்றும் வீடியோக்களின் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி?

1 - வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

2 - டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

3 - மொபைல் டேட்டா பயன்பாட்டின் போது ஆப்ஷனில் அனைத்து ஆப்ஷன்களையும் அன்டிக் செய்து ஒகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - இதே வழிமுறையினை வைபை மற்றும் ரோமிங் ஆப்ஷன்களிலும் செயல்படுத்த வேண்டும்

சாட் பேக்கப்பில் வீடியோக்களை நிராகரிப்பது எப்படி?

வாட்ஸ்அப் வீடியோ கால் மேற்கொள்ளும் போது அதிகளவு டேட்டா செலவாகும் என்பது அனைவரும் அறிந்ததே.வீடியோக்கள் அப்லோடு மற்றும் டவுன்லோடு ஆகும் போது அதிக டேட்டா செலவாகும். சமீப நாட்களில் பகிரப்படும் வீடியோக்களில் பல வீடியோக்கள் கொரோனா வைரஸ் பற்றியே இருக்கின்றன. பெரும்பாலும் இதுபோன்ற வீடியோக்களை பேக்கப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சாட் பேக்கப் செய்யப்படும் போதும் அதிகளவு இண்டர்நெட் பயன்படுத்தப்படும். இதுபோன்று செலவாகும் டேட்டாவை சேமிக்க, நீங்களாகவே தரவுகளை கிளவுட் ஸ்டோரேஜில் அப்லோடு செய்யலாம்.

இதற்கு சாட் பேக்கப் ஆப்ஷனில் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து வீடியோ ஆப்ஷனை நீக்கிவிட வேண்டும். 

Post a Comment

1 Comments

  1. Betway legalbet | Best legalbet.co.kr
    Betway is licensed by the UK Gambling Commission under the Gambling Commission Act 2020. 카지노 Withdrawal: Within クイーンカジノ 48 다파벳 hours after the first withdrawal, your qualifying bets must be

    ReplyDelete