Ticker

6/recent/ticker-posts

Zoom App-ல் பாதுகாப்பை எப்படி ஆக்டிவேட் செய்வது? புதிய 2 அங்கீகாரம்!

activate security in Zoom App cloud meetings

இந்த Zoom அதன் சேவையில் மற்றொரு பாதுகாப்பு அம்சத்தை தற்பொழுது சேர்த்துள்ளது. தரவு மற்றும் பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க நிறுவனம் தற்பொழுது தனது பயன்பாட்டில் 2 காரணி-அங்கீகாரத்தை செயல்படுத்துகிறது. மேலும் 2 காரணி-அங்கீகாரம் என்பது அடிப்படையில் உங்கள் கணக்கிற்கான ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்க உதவும், இதனால் உங்கள் பாஸ்வோர்ட் உடன் கூடுதலாக உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP இதில் குறியீட்டையும் பயன்படுத்தலாம்.
எனவே இந்த zoom ல் பயன்பாட்டில் எப்படி 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் அங்கீகாரத்தை இயக்குவது? என்று இப்போதே தெரிந்துகொள்ளுங்கள். இதை எவ்வாறு செயல் படுத்துவது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், ஜூம் செயலில் ஆதரவு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

activate security in Zoom App cloud meetings

அதில் முதலில் ஜூம் வெப் இணையதளத்தில் உள்நுழைக. பின் நேவிகேஷன் மெனுவில், அட்வான்ஸ் மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யுங்கள். பின்  2 ஃபாக்டர் என்ற ஆதென்டிகேஷன் அங்கீகார விருப்பம் ஆக்டிவேட்டில் உள்ளதா என்பதையும் செக் செய்யுங்கள். மேலும் இதற்காக 2FA ஐ இயக்க பயனர்களைக் குறிப்பிட இந்த மூன்று விதமான விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அதில் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பயனர்களும் (All users in your account): இது உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் 2FA ஐ இயக்கும்.

மேலும் இந்த 2FA ஐ நடைமுறைப்படுத்துவது, அதில் முக்கியமான தரவு மற்றும் வாடிக்கையாளர் தகவல்களுக்கான இணக்கக் கடமைகளை பூர்த்தி செய்ய நிறுவனங்களுக்கும் உதவுகிறது, "என்றும் ஜூம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அம்சத்துடன், OTP களைப் பெற Microsoft Authenticator அல்லது Google Authenticator போன்ற முக்கிய அங்கீகார பயன்பாடுகளையும் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் மொபைல் எண் அல்லது உங்கள் மின்னஞ்சல் மூலமாக முகவரியைச் சேர்த்த பிறகு உங்கள் OTP-ஐ பெற்று கொள்ளலாம்.

Post a Comment

0 Comments