Ticker

6/recent/ticker-posts

இன்டெர்நெட் இல்லாத ஒரு தேசம்! இப்படியும் ஒரு தேசமா!!


                       இன்டர்நெட் யுகம் என்று வர்ணிக்கப்படுகிறது இந்தக் காலம். பல்வேறு தொழில்நுட்பம் வளர்ந்த ஒரு நாட்டு மக்களுக்கு இன்டர்நெட் என்றால் என்னவென்றே தெரியாது ஆம், வடகொரியா நாட்டு மக்கள் இன்டர் நெட் பயன்படுத்தத் தடை இருக்கிறது.

                       வட கொரியா, அணுஆயுத போட்டியால் உலக நாடுகளை அதிர வைக்கும் நாடாகத் திகழ்கிறது. அமெரிக்காவையும் எதிர்க்கும் துணிவினால் பல்வேறு பொருளாதார தடைகளையும், இன்னும் அரசியல் ரீதியான இடையூறுகளையும் எதிர்கொண்டு வருகிறது. அணுசக்தி உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அவ்வளவு வளர்ச்சி கண்டிருந்தாலும் அந்த நாட்டு மக்களுக்கு இணையதளம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதுதான் உண்மை. காரணம் அங்கே பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

                       ஒரே ஒரு நிறுவனத்திற்குத்தான் இன்டர்நெட் சேவை வழங்கும் அதிகாரம் உள்ளது. அரசு அதிகாரிகள் மட்டுமே இணையத் தளத்தைப் பயன்படுத்த முடியும். மொத்தம் 1024 ஐ.பி. முகவரி மட்டும் கணினிகளில் இணைய இணைப்புக்கான அனுமதி உள்ளது. வெளிநாட்டில் இருந்து ஒரு சுற்றுலாப் பயணி சென்றால்கூட இன்டர்நெட் பயன்படுத்த முடியாது. அப்படி பயன் படுத்த விரும்பினால் அதற்கு தனியே அனுமதி பெற வேண்டும்.

       வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள
இதைப் பற்றிய முழுவிபரம் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


மேலும் தகவல்களுக்கு :
                    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

Post a Comment

0 Comments